இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: ஹல்மஹேரா தீவு அருகே விமானங்கள் பறக்க தடை

2 hours ago 2

ஜகார்த்தா,

இந்தோனேசியா பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு செயல்படும் பல எரிமலைகள் காணப்படுகின்றன. அவை அவ்வப்போது வெடித்து சிதறி ஆபத்தை ஏற்படுத்துகிறது.

அந்தவகையில் மலுகு மாகாணம் ஹல்மஹேரா தீவில் உள்ள டுகோனோ எரிமலை நேற்று வெடித்து சிதறியது. இதில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் உயரத்துக்கு தீக்குழம்புகள் வெளியேறியன. எனவே அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

இதனையடுத்து ஹல்மஹேரா தீவு அருகே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

Read Entire Article