1. Sub-Inspector (Telecommunication) (Male): 78 இடங்கள் (பொது-31, எஸ்சி-12, எஸ்டி-6, ஒபிசி-21, பொருளாதார பிற்பட்டோர்-8).
2. Sub- Inspector (Telecommunication) (Female): 14 இடங்கள் (பொது-6, எஸ்சி-2, எஸ்டி-1, ஒபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்- 1)
சம்பளம்: ரூ.35,400- 1,12,400. வயது: 20 முதல் 25க்குள். தகுதி: கணிதம்/இயற்பியல்/வேதியியல்/தகவல் தொழில்நுட்பம்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பாடத்தில் பிஎஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ECE/EEE/CSE/IT பிரிவுகளில் பி.இ.,/பி.டெக்., அல்லது பிசிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. Head Constable (Male) (Telecommunication): 325 இடங்கள். (பொது-123, எஸ்சி-50, எஸ்டி-26, ஒபிசி-90, பொருளாதார பிற்பட்டோர்-36).
4. Head Constable (Female) (Telecommunication): 58 இடங்கள் (பொது-22, எஸ்சி-9, எஸ்டி-5, ஒபிசி-16, பொருளாதார பிற்பட்டோர்-6)
சம்பளம்: ரூ.25,500- 81,100. வயது: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். தகுதி: கணித பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ஐடி/ கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் ஐடிஐ அல்லது டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
5. Constable (Male) (Telecommunication): 44 இடங்கள் (பொது-10, எஸ்சி-7, எஸ்டி-2, ஒபிசி-11, பொருளாதார பிற்பட்டோர்-5).
6. Constable (Female) (Telecommunication): 7 இடங்கள் (பொது-3, எஸ்சி-1, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1)
சம்பளம்: ரூ.21,700- 69,100. வயது: 18 முதல் 23க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ/டிப்ளமோ படித்திருப்பதுவிரும்பத்தக்கது.
உடற்தகுதி: ஆண்கள் 170 செ.மீ., உயரமும், பெண்கள் 157 செ.மீ., உயரமும் இருக்க வேண்டும். எஸ்டியினருக்கு 7.5 செ.மீ., சலுகை வழங்கப்படும். மார்பளவு (ஆண்களுக்கு மட்டும்) சாதாரண நிலையில் 80 செ.மீ., அகலமும், 5 செ.மீ., விரிவடையும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஐடிபிபியால் நடத்தப்படும் உடற்திறன் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
கட்டணம்: எஸ்ஐ பணிக்கு ரூ.200/-. இதர பணிகளுக்கு ₹100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், எஸ்சி/எஸ்டி யினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பதாரரின் உடற்தகுதி, உடற் திறன் தகுதி, மருத்துவத் தகுதி மற்றும் இந்தோ திபெத் படை நிர்வாகத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.12.2024.
The post இந்தோ- திபெத் போலீசில் 526 கான்ஸ்டபிள் எஸ்ஐக்கள் appeared first on Dinakaran.