இந்து பெண்களை இழிவாக பேசியதாக வழக்கு: திருமாவளவனுக்கு எதிரான வழக்கு ரத்து

2 days ago 2

சென்னை,

கடந்த 2020-ம் ஆண்டு நடந்த சர்வதேச கருத்தரங்கில் பெரியார் மற்றும் இந்திய அரசியல் என்ற தலைப்பில் திருமாவளவன் பேசினார். அப்போது அவர் இந்து பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பாக திருமாவளவன் மீது மதுரை பேரையூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, திருமாவளவன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுஸ்மிருதி நூல் பெண்களை எவ்வாறு சித்தரித்துள்ளது என கூறியதாகவும், இந்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எந்த கருத்தும் கூறவில்லை எனவும் திருமாவளவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி, மனுஸ்மிருதியில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்துதான் திருமாவளவன் கருத்து தெரிவித்திருக்கிறார் என்றும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனவும் கூறி, திருமாவளவன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Read Entire Article