நாக்பூர்,
நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பகவத் கூறியதாவது:- மக்கள் தொகை குறைந்து வருவது கவலை அளிக்கிறது. ஒரு சமூகத்தின் பிறப்பு விகிதம் 2.1 சதவிகிதத்திற்கும் கீழ் குறையும் போது சமூகம் அழிவை எதிர்கொள்கிறது என்று மாடர்ன் டொமகிரபிக் ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.
நமது நாட்டின் மக்கள் தொகை கொள்கை 1998 அல்லது 2002 ல் உருவாக்கப்பட்டது. அதில் தெளிவாக ஒரு விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த ஒரு சமூகத்தின் மக்கள் தொகையும் 2.1 க்கு கீழ் குறையக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே மக்கள் தொகை சதவிகிதம் 2.1 க்கு கீழ் குறையக் கூடாது. எனவே இதில் குறைவு ஏற்பட்டால் மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.