இந்திய அரசியலமைப்பின் மூலம் சமூக நீதியை அடைந்துள்ளோம் - ஜனாதிபதி திரவுபதி முர்மு

3 hours ago 2

புதுடெல்லி,

நாடு முழுவதும் இன்று இந்திய அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுகிறது. அரசியல் சாசனம் அமலுக்கு வந்து 75 ஆண்டு நிறைவு பெற்றதையொட்டி நாளுமன்றத்தில் சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி தொடங்கியதும், அரசியல் சாசனத்தின் முன்னுரை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து அரசியல் சாசன நாள் தபால் தலை மற்றும் சிறப்பு நாணயத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார். தொடந்து நிகழ்ச்சியில் ஜனாதிபதி உரையாற்றியதாவது;

"நமது அரசியலமைப்பு உயிருள்ள முற்போக்கான ஆவணம். இந்திய அரசியலமைப்பின் மூலம், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் இலக்குகளை அடைந்துள்ளோம். அனைத்து குடிமக்களும் அரசியலமைப்பு லட்சியங்களை உள்வாங்கி, அடிப்படைக் கடமைகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் 2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியா என்ற தேசிய இலக்கை அடைய உழைக்க வேண்டும். பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான சட்டத்தின் மூலம் நமது ஜனநாயகத்தில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

 

Read Entire Article