சென்னை ஆர்.கே.சாலையில் மின்மாற்றியில் தீ விபத்து ஏற்பட்டது.
மெட்ரோ பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மின்மாற்றிகளில் இருந்து சத்தம் கேட்டுள்ளது.
மெட்ரோ ஊழியர்களால் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க முடியாததால், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மயிலாப்பூரில் இருந்து வந்த தீயணைப்பு வாகனம் மூலம் தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.