தர்மபுரி, டிச.28: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே லளிகம் கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள், காரில் ஆன்மீக சுற்றுலாவுக்கு கடந்த 23ம் தேதி புறப்பட்டனர். அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் வெங்கடேசன் (45) என்பவரும் சென்றார். அவர்கள் சீர்காழி, சிதம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு, நல்லம்பள்ளி அருகே சேசன்பட்டி ஜங்ஷன் பகுதியில் காரை நிறுத்தி விட்டு அங்குள்ள கடைக்கு டீ குடிக்க சென்றனர். அந்த நேரம் காரில் தூங்கிக்கொண்டிருந்த வெங்கடேசனை எழுப்பினர். அவர் உடல் அசைவற்ற நிலையில் இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆன்மீக சுற்றுலா சென்ற டிரைவர் திடீர் சாவு appeared first on Dinakaran.