“ஆதவ் அர்ஜுனாவின் அண்மைகால செயல்பாடு விசிகவின் நலனுக்கு எதிராக உள்ளது” - திருமாவளவன்

1 month ago 4

மதுரை: ஆதவ் அர்ஜுனாவின் அண்மைகால செயல்பாடு விசிகவின் நலனுக்கு எதிராகவே இருக்கிறது என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

மதுரையிலுள்ள கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசியளவில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. புதிய கூட்டணியில் இடம்பெற வேண்டிய தேவையில்லை. திமுக கூட்டணியை கட்டுப்பாடு இன்றி சிதறடிக்கவேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் சதி திட்டமாக இருக்கும்.

Read Entire Article