ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

1 week ago 8

சென்னை,

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 12 சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். இதனால், மாணவர்களின் கல்வி சம்பந்தப்பட்ட கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டன. பல பள்ளிகளில் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழக அரசு மாணவர்களின் கற்றல், ஆசிரியர்களின் கற்பித்தல் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு பள்ளிகளை முழுமையாக இயக்கவும், ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் முன்வர வேண்டுமே தவிர, ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முயற்சிக்கூடாது.

கால தாமதம் செய்யாமல், இடைநிலை ஆசிரியர்களிடம் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். தி.மு.க. அரசு கடந்த சட்டசபை தேர்தலில் ஆசிரியர்களுக்கு அறிவித்த அறிவிப்புகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும். மேலும், பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஊதிய முரண்பாடுகளை சரி செய்தல் உள்ளிட்ட இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article