அழகு தரும் விளக்கெண்ணெய்

4 hours ago 2

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

விளக்கெண்ணெயை முகத்துக்கு பயன்படுத்துவதன் நன்மை குறித்து ஆய்வுகள் குறைவாகவே உள்ளது. ஆனால், விளக்கெண்ணெய் சருமத்துக்கு நன்மைகள் செய்யும் என்று சான்றுகள் தெரிவிக்கிறது. விளக்கெண்ணெய் என்றால் எல்லோருக்கும் எளிதாக புரியும். முத்துக் கொட்டையிலிருந்து எடுக்கப்படும் விளக்கெண்ணெய் பாதுகாப்பானது. பாரம்பரியமாகவே கை வைத்தியம், சித்தவைத்தியம், ஆயுர்வேதம் போன்றவற்றில் விளக்கெண்ணெயும் பயன்படுத்தப்படுகிறது. கண் எரிச்சலை போக்க விளக்கெண்ணெயை எகிப்தியர்கள் பயன்படுத்தி வந்தார்கள். முகத்துக்கு இதன் மேற்பூச்சு பயன்படுத்தும் போது உண்டாகும் அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.

சருமம் எப்போதும் ஈரப்பதமாக இருக்க வேண்டும். இல்லையெனில் வறட்சியாகி வெடிப்பை உண்டாக்கும். சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க போதுமான தண்ணீர் குடிப்பது அவசியம். சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் விளக்கெண்ணெய் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றாலும் மற்ற தாவர எண்ணெயை போலவே விளக்கெண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்கும் என்றும் சான்றுகள் சொல்கிறது.

முகப்பருக்கள் பெரும்பாலும் எண்ணெய் பசை சருமத்தால் வருகின்றன. அதே சமயம் முறையான பராமரிப்பு இல்லாத நிலையிலும் இவை ஏற்படலாம். விளக்கெண்ணெய் தயாரிக்க பயன்படுத்தும் முத்துக்கொட்டை விதைகளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை
தடுக்கின்றன.

தடிப்பு, அரிப்பு போன்றவை சருமத்தை பாதிப்புக்குள்ளாக்கும். அது தீவிரமாகாமல் இருக்க ஆரம்பகட்ட சிகிச்சை மேற்கொள்வது அவசியம். பூஞ்சை தொற்றை விளக்கெண்ணெய் சரி செய்யக்கூடும். முகத்தில் உண்டாகும் தடிப்பையும் விளக்கெண்ணெய் சரி செய்யும். விளக்கெண்ணெயின் ஈரப்பதமூட்டும் பண்புகள் வெயிலுடன் தொடர்பு கொண்டுள்ள சரும எரிச்சலை போக்க உதவும். விளக்கெண்ணெய் அடர்த்தியாக இருப்பதால் அதை சருமத்தில் சீராக பயன்படுத்துவதில் பலரும் தயங்குகிறோம். ஆனால் இதை சரியான முறையில் எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

விளக்கெண்ணெய் இரண்டு டீஸ்பூன் எடுத்து, சுத்தமான பஞ்சில் நனைத்து, சருமத்தில் முகம், கழுத்துப் பகுதியில் நேரடியாக துடைத்து விடவும். பிறகு வட்ட இயக்கங்களில் 3-5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவவும். விளக்கெண்ணெய் அடர்த்தியை விரும்பாதவர்கள் மற்ற தாவர எண்ணெய்களுடன் இதை கலந்து பயன்படுத்தலாம்.

தொகுப்பு: பா.பரத், சிதம்பரம்

The post அழகு தரும் விளக்கெண்ணெய் appeared first on Dinakaran.

Read Entire Article