அரியானா சட்டசபை தேர்தல்: ஜுலானா தொகுதியில் வினேஷ் போகத் வேட்புமனு தாக்கல்

1 week ago 11

ஜுலானா,

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். பஜ்ரங் புனியாவுக்கு விவசாயப்பிரிவு செயல் தலைவர் பொறுப்பு தரப்பட்டுள்ளது. அதே சமயம், அரியானாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜுலானா தொகுதியில் வினேஷ் போகத் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பா.ஜ.க. சார்பில் கேப்டன் யோகேஷ் பைரகி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜுலானா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் எஸ் ஹூடா முன்னிலையில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, வினேஷ் போகத் கூறுகையில், "நான் அரசியலுக்கு வருவது எனது அதிர்ஷ்டம். ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். ஜுலானா மக்கள் எனக்கு கொடுக்கும் அன்புக்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன்" என்று கூறினார்.

#WATCH | Jind: Congress candidate from Julana Assembly Constituency Vinesh Phogat files her nomination for the upcoming Haryana Assembly elections in the presence of Congress MP Deepender S Hooda pic.twitter.com/ahrjtGbdgt

— ANI (@ANI) September 11, 2024
Read Entire Article