நரசிங்கபுரம், ஜூலை 17: சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நகரப்பஸ் (வழிதடம் எண் 34) பஸ் ஸ்டாண்டிற்கு மாலை வந்தது. அப்போது டி-ஷர்ட் அணிந்த இளைஞர் ஒருவர் டிக்கெட் பரிசோதகர்போல் பயணிகளிடம் பயணச்சீட்டை கேட்டு வாங்கி ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் சிலர் டிக்கெட் பரிசோதனை செய்ய நீங்கள் யார் என கேட்டுள்ளனர். அதற்கு தான் ஒரு அதிகாரி என அந்த நபர் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. பஸ்சில் சோதனை நடத்திய நபர் உண்மையாகவே அரசு பஸ் டிக்கெட் பரிசோதகர் தானா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
The post அரசு பஸ்சில் வாலிபர் டிக்கெட் பரிசோதனை appeared first on Dinakaran.