அம்மாக்குளம் கிராமத்தில் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு விழிப்புணர்வு

20 hours ago 2

 

அரியலூர், ஜன. 8: அரியலூர் மாவட்டம் அம்மாக்குளம் கிராமத்தில் நேற்று அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் தமிழரசன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் அறிவழகன் கிராம பொதுமக்களுக்கு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்புகள், குழந்தை திருமணம் எதிரான மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்.
மேலும் தமிழக காவல்துறையின் காவல் உதவி செயலி குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு இலவச உதவி எண்கள் 1098 மற்றும் 181 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதேபோன்று செந்துறை காவல்துறையினர் செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

The post அம்மாக்குளம் கிராமத்தில் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Read Entire Article