அமைச்சர் சி.வி.கணேசன் திடீர் ஆய்வு

1 month ago 6

சேலம், நவ.20: சேலம் கோரிமேடு தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சேலம் கோரிமேட்டில் அமைந்துள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவி.கணேசன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது கட்டுமான தொழிலாளர்களின் பல்வேறு மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், நடப்பாண்டில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை, உதவித்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கை, கடந்த மாதம் எத்தனை பேர் கோரிக்கை மனு அளித்தனர் என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், அலுவலகத்தில் பதிவு செய்து உதவித்தொகை பெற்று இயற்கை மரணம், விபத்து மரணம், கட்டுமான ெதாழிலில் ஈடுபட்டு எத்தனை பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து கேட்டறிந்தார்.
குறிப்பாக ஓய்வு ஊதியம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். மேலும், அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் வருகைப்பதிவேடு குறித்த விவரங்களை சரிபார்த்தார். தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். தொழிலாளர் நல அலுவலகத்தில் ெபாதுமக்கள் வழங்கும் மனுக்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், புதுப்பிக்கும் பணியை நிலுவை இல்லாமல் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் அமைச்சர் அறிவுறுத்தினார். தொடர்ந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங், ஆர்டிஓ அபிநயா, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் சங்கீதா, மண்டல வேலைவாய்ப்பு துறை இணை இயக்குநர் லதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணி, கோரிமேடு அரசு ஐடிஐ துணை இயக்குநர் ராஜேஷ்வரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் சி.வி.கணேசன் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article