அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்; அதனை மீற முடியாது: உயர்நீதிமன்றம் அதிரடி

1 month ago 6

சென்னை: அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்; ஆளுநர் அதனை மீற முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொலை வழக்கில் ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாரதி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், முன்கூட்டியே விடுவிக்கும் அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது; பேரறிவாளன் உள்ளிட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை மேற்கோள்காட்டி, அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும், ஆளுநர் அதை மீற முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஆளுநருக்கு தனிப்பட்ட தார்மீக உரிமை இல்லை எனக் கூறி, முன் கூட்டியே விடுதலை செய்ய மறுத்த உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் மனுவை மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட்டனர். அதுவரை வீரபாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்; அதனை மீற முடியாது: உயர்நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article