அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இந்திய விக்கெட் கீப்பர் ஓய்வு அறிவிப்பு

1 week ago 5

மும்பை,

இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருத்திமான் சஹா (வயது 40) அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். இவர் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மகேந்திர சிங் தோனியின் ஓய்வுக்குப்பின் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அணியில் நிலையான இடம்பிடித்தார்.

இருப்பினும் கேஎல் ராகுலின் வருகை மற்றும் மோசமான பார்ம் காரணமாக அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். இவர் கடைசியாக 2021-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றிருந்தார். அதன்பின் அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி சீசனோடு அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் (ஐ.பி.எல். உள்பட) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் ரஞ்சி தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

After a cherished journey in cricket, this season will be my last. I'm honored to represent Bengal one final time, playing only in the Ranji Trophy before I retire. Let's make this season one to remember! pic.twitter.com/sGElgZuqfP

— Wriddhiman Saha (@Wriddhipops) November 3, 2024
Read Entire Article