அண்ணா பிறந்தநாளில் அவர் வழிநடந்து உரிமைப்போரை வென்றெடுப்போம்: கனிமொழி எம்பி எக்ஸ் தளத்தில் பதிவு

5 days ago 7

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது எக்ஸ்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: ‘அண்ணா’ வெறும் பெயரல்ல. அவர் ஒரு வரலாற்றின் பெருங்குரல்-பண்பாட்டின் குறியீடு-உரிமைப்போரின் முன்னோடி-தமிழ்நாட்டின் அடையாளம்-திராவிட மாடலின் தொடக்கம். சமூகநீதி-சுயமரியாதை-மாநில உரிமையைக் கொள்கை முழக்கமாய் கொண்டு தமிழ்நாட்டின் தடத்தை மாற்றியவர். திராவிட இயக்கத்தின் கலங்கரைவிளக்கமாய் என்றென்றும் வழிகாட்டும் அண்ணாவின் பிறந்தநாளில் அவர் வழி நடந்து உரிமைப்போரை வென்றெடுப்போம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

 

The post அண்ணா பிறந்தநாளில் அவர் வழிநடந்து உரிமைப்போரை வென்றெடுப்போம்: கனிமொழி எம்பி எக்ஸ் தளத்தில் பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article