சென்னை,
சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 21ம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்கலைக்கழகம் நாளை வழக்கம்போல் இயங்கும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தற்போது முதல் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. அதனால், நாளை அட்டவணைப்படி தேர்வு நடக்கும். விடுமுறை அல்ல என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.