அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது: சென்னை உயர்நீதிமன்றம்

16 hours ago 1


சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

டிசம்பர் 25ஆம் தேதி, இந்த வழக்கு தொடர்பாக ஞானசேகரன் என்ற நபர் கைது செய்யப்பட்டு அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம். டிசம்பர் 26ஆம் தேதி, காலையில் அந்தப் பெண் கொடுத்த புகார் தொடர்பாகப் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR) சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று சென்னை உய்ரநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை தொடங்கியது. அந்தப் பெண்ணுக்கு நடந்த அசம்பாவிதங்கள் பற்றிய விரிவான தகவல்கள் மட்டுமின்றி அந்தப் பெண்ணின் பெயர், அலைபேசி எண், படிக்கும் பாடப்பிரிவு, முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான பெண்கள் தொடர்பான பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வெளியிடக் கூடாது என்று சட்டங்கள் தெரிவிக்கின்றன.

முதல் தகவல் அறிக்கையை காவல்துறை வெளியிடவில்லை தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் வாதம் செய்துள்ளார். இணையதளத்தில் வெளியான முதல் தகவல் அறிக்கை முடக்கப்பட்டது. வழக்கு தொடர்பான விரிவான அறிக்கை சீல் வைத்த உறையில் தாக்கல் செய்யப்படும்.

தலைமை நீதிபதிதான் சூமோட்டோ வழக்குக்கு அனுமதி தர வேண்டும். தலைமை நீதிபதி வெளியூர் சென்றுள்ளதால் அவரது அனுமதியின்றி விசாரிக்க முடியாது என்று ஐகோர்ட் நீதிபதிகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் கூறியுள்ளனர். வழக்குகளை தாக்கல் செய்வதை யாரும் தடுக்க முடியாது; ரிட் வழக்காக தாக்கல் செய்தால் விசாரிப்போம்.

தலைமை நீதிபதியின் உத்தரவு பெற்ற பின் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ரிட் வழக்காக தாக்கல் செய்ததால் மாலை விசாரணை நடைபெறும். உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் வழக்குகள் இன்று மாலை விசாரணைக்கு எடுக்கப்படும்.

 

 

The post அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது: சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Read Entire Article