அசுரர்களுக்காக திறந்தது… அனைவருக்கும் நிகழ்ந்தது சொர்க்க வாசல் திறக்கும் ரகசியம்

4 hours ago 2

இன்று வைகுண்ட ஏகாதசி

மார்கழி மாதம் வரும் ஏகாதசி திதியில் வளர்பிறை பதினொன்றாம் நாள் வரும் தினத்தை வைகுண்ட ஏகாதசி என்கிறோம். பகல் பத்து முடியும் பத்தாம் நாளில் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.

சரி… வைகுண்ட ஏகாதசி உருவான கதையை பார்ப்போமா?

முரன் என்ற அசுரன், தேவர்க ளையும், முனிவர்களையும் பாடாய்படுத்தி வந்தான். முரனின் தொல்லையிலிருந்து தங்களை மீட்டெடுக்குமாறு பகவான் விஷ்ணுவிடம் தேவர்கள், முனிவர்கள் முறையிட்டனர். இதனையடுத்து பலம் பொருந்திய முரனுடன் போர் செய்து விஷ்ணு வெற்றி பெற் றார். போரிட்ட களைப்பில் அங் குள்ள ஒரு குகையில் ஓய்வெடுக்க விஷ்ணு சென்றார். தோல்வியால் கோபத்தில் இருந்த முரன், ஒரு பெரிய வாளை எடுத்து, விஷ் ணுவை மீது வீச ஓடி வந்தான். இதை மனக்கண்ணால் அறிந்த விஷ்ணுவின் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்தியானது பெண் ணாக உருவெடுத்தது. அந்த பெண், முரனுடன் தீர்க்கமாக போரிட்டு வென்றாள்.

அந்த வீர தீர மங்கைகக்கு ‘ஏகா தசி’ என பெயர் வைத்தார் பெரு மாள். இதனால் அன்றைய திதிக்கு ஏகாதசி என பெயர் வந்தது. இந்த நாளில் தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி கிடைக்குமென பெருமாள் வரம் தந்தார். இதனால் இந்த தினத்தை வைகுண்ட ஏகா தசி என்ற பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

சரி.. சொர்க்க வாசலை ஏன் திறக்கிறாங்கன்னு கேட்குறீங்களா? ரகசியத்தை திறப்போம். வாங்க…
படைப்பு கடவுளான பிரம் மாவின் அகங்காரத்தை ஒடுக்க நினைத்த மகா விஷ்ணு. தன் காதுகளிலிருந்து மது, கைடபர் என்ற இரண்டு அரக்கர்களை வெளிப்படச் செய்தார். அவர்கள் பிரம்மாவைக் கொல்ல முயன்ற போது, தடுத்த மகா விஷ்ணு, பிரம் மாவை விட்டு விடுமாறு கூறினார். அவ்வாறு செய்தால் அசுரர்கள் விரும்பும் வரத்தை வழங்குவதாக மகா விஷ்ணுவிற்கு வேண்டுமா மகா விஷ்ணுவிற்ரம் தருவதாகக் கூறினர்.

மகா விஷ்ணுவும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட் டார். உடனே அசுரர்கள். “ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், நீங்கள் எங்களுடன் ஒரு மாதம் போரிட வேண்டும். அதன் பிறகே நாங்கள் சித்தி அடைய வேண்டும்” என்று வேண்டினர். பகவானும் அப்படியே வரம் தந்தார் யுத்தத்தின் முடிவில் பகவான் அவர்களை வீழ்த் தினார். பகவானின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள், பகவானின் பரமபதத்தில் தாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தினைக் கேட்டனர். இதையடுத்து, மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமப தத்தின் சொர்க்க வாசலை (வடக்கு வாசல்) திறந்து, அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் அன் புடன் இணைத்துக் கொண்டார்.

அசுரர்கள் தாங்கள் பெற்ற பேரின்பம் அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பினர். உடனே அசு ரர்கள், பெருமாளிடம், “நாங்கள் பெற்ற பேறை மற்றவர்களும் பெற வேண்டும். உங்களை கோயில்க ளில் சிலையாக வடித்து அனைவ ரும் பிரதிஷ்டை செய்ய வேண்டும். மார்கழி மாத வளர்பிறை ஏகாத சியன்று, எங்களுக்காக சொர்க்க வாசல் திறக்கப்பட்ட நிகழ்வை, ஒரு உற்சவமாகவே அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். அன்று ஆலயத்தின் சொர்க்கும் பொசல் தங்களுடன் சொள் வரும்போது. யாக வெளியே வருபவர்களும், தரிசிப்பவர்களும் மோட்சம் அடைய நீங்கள் அருள வேண்டும்” என்று வரம் கேட்டனர். பெருமாளும் அவ்வாறே வரம் அளித்தார். அதன்பின்னரே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறக்கப்படுவது அனைத்து பெருமாள் கோயில்களிலும் தொன்று தொட்டு நடந்து வருகிறது.

The post அசுரர்களுக்காக திறந்தது… அனைவருக்கும் நிகழ்ந்தது சொர்க்க வாசல் திறக்கும் ரகசியம் appeared first on Dinakaran.

Read Entire Article