தேவையான பொருட்கள்
250கிராம் சிகப்பு அகத்திப்பூக்கள்
1/2 கப் சாம்பார் வெங்காயம்
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1/4 கப் தேங்காய் துருவல்
தேவையான அளவுஉப்பு
தாளிக்க:
1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1/4டீஸ்பூன் கடுகு
1 டீஸ்பூன் உளுந்து பருப்பு
1டீஸ்பூன் கடலை பருப்பு
கறிவேப்பிலை
செய்முறை:
சிகப்பு அகத்தி பூக்களை எடுத்து சுத்தம் செய்து, தண்ணீரில் கழுவி தயாராக வைக்கவும்.பின்னர் பூக்களை பொடியாக நறுக்கவும். அத்துடன் சம்பார் வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அத்துடன் நறுக்கி வைத்துள்ள அகத்திப்பூவை சேர்த்து வதக்கவும்.அத்துடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடவும்.அத்துடன் உப்பு கலந்து கொஞ்சமாக தண்ணீர் தெளித்து, மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேக வைக்கவும்.பின்னர் திறந்து தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து விட்டு இறக்கினால் சுவையான அகத்தி பூக்களை கொண்டு செய்த பொரியல் தயார்.
The post அகத்திப்பூ பொரியல் appeared first on Dinakaran.