புதுச்சேரி: ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த பெருமழையால் கடலூர் - புதுச்சேரி சாலையில் மழைநீர் ஆறுபோல் ஓடுவதால் அச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே சனிக்கிழமை கரையை கடந்தது. புயல் காரணமாக சூறாவளி காற்றுடன் புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் இடைவிடாது பெருமழை கொட்டி தீர்த்தது. இதனால் புதுச்சேரி நகரப்பகுதி மட்டுமின்றி கிராமப் பகுதிகளும் வெள்ளக்காடானது. பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.