2 கோடி பார்வைகளை கடந்த சூர்யாவின் 'ரெட்ரோ' டீசர்

15 hours ago 1

சென்னை,

நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் . சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி உள்ளது.

நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'ரெட்ரோ' எனப்பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சூர்யாவின் 'ரெட்ரோ' படத்தின் டீசர் 2 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இது குறித்த பதிவை படக்குழு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

2️⃣ Crore+ Love… Pure Love ♥️#RETRO Title Teaser crosses 2 Crore+ real-time views Watch it here▶️ https://t.co/qNdZ94sxtA#LoveLaughterWar #RetroFromSummer2025@Suriya_Offl @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @prakashraaj @C_I_N_E_M_A_A @rajsekarpandianpic.twitter.com/Mw92gudHCn

— 2D Entertainment (@2D_ENTPVTLTD) December 27, 2024
Read Entire Article