17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த உடற்கல்வி ஆசிரியர்

3 days ago 4

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் நெலமங்களா டவுன் தாபஸ்பேட்டையை சேர்ந்தவர் தாதா பீர். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் தாதாபீருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தாதா பீர் சிறுமியை காதலிப்பதாக கூறி, அடிக்கடி வெளியே அழைத்து சென்று பலாத்காரம் செய்தார்.

இந்த சம்பவத்தை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என கூறி சிறுமிக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். இந்தநிலையில் நடந்த சம்பவத்தை சிறுமி பெற்றோரிடம் கூறினாள். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தாபஸ்பேட்டை போலீசில் தாதாபீர் மீது புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தாபஸ்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தாதாபீரை தேடியபோது அவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தாதா பீரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article