116வது பிறந்தநாள் திமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

5 days ago 4

 

புதுக்கோட்டை, செப்.17: புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பேரணி மற்றும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி புதுக்கோட்டையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து நடைபெற்ற பேரணிக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலர் செல்லபாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவிதைப்பித்தன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா, மாநகர திமுக செயலர் செந்தில் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அண்ணாசிலை அருகே பேரணி முடிவடைந்தது. அங்கு அண்ணாவின் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்தனர். பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.

The post 116வது பிறந்தநாள் திமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article