110 வருடங்களுக்குப்பின் மெல்போர்னில் வெளிநாட்டு வீரராக சாதனை படைத்த பும்ரா

1 day ago 1

மெல்போர்ன்,

பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 474 ரன்களும், இந்தியா 369 ரன்களும் அடித்தன.

இதனையடுத்து 105 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களுடன் தடுமாறி வருகிறது. மார்னஸ் லபுசாக்னே 52 ரன்களுடனும், கம்மின்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

ஆஸ்திரேலியா இதுவரை 215 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் பும்ரா இதுவரை 7 விக்கெட்டுகள் (2 இன்னிங்சிலும் சேர்த்து) வீழ்த்தியுள்ளார். இதையும் சேர்த்து மெல்போர்னில் அவர் இதுவரை கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது.

இதன் மூலம் 110 வருடங்களுக்குப்பின் மெல்போர்ன் மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வெளிநாட்டு வீரர் என்ற மாபெரும் சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

Read Entire Article