10 கோடி பார்வைகளை கடந்த 'கோல்டன் ஸ்பாரோ' பாடல்

1 month ago 4

சென்னை,

தனுஷ், ராஜ் கிரண் நடித்த 'பவர் பாண்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த 'ராயன்' படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' உருவாகியுள்ளது.

இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர். மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தின் முதல் பாடலாக'கோல்டன் ஸ்பாரோ' பாடல் வெளியானது. நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்துள்ள இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் இரண்டாவது பாடலாக 'காதல் பெயில்' என்ற பாடல் கடந்த திங்கள் அன்று மாலை 5.மணிக்கு வெளியானது. இப்பாடலின் வரிகளை தனுஷ் எழுதி பாடியுள்ளார். இந்தப் பாடல் ஜென் இசட் சூப் பாடலாக அமைந்துள்ளது.

தற்போது இந்த பாடல் வெளியாகி சுமார் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இது குறித்த பதிவை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Yes it's a 100 Million for #GoldenSparrow …. thanks to my director @dhanushkraja … my first work for him in his direction has become lucky too … thanks team #Neek @theSreyas pic.twitter.com/SxA3AB90Zw

— G.V.Prakash Kumar (@gvprakash) December 9, 2024
Read Entire Article