'ஹவுஸ்புல் 5' படத்தில் இத்தனை நடிகைகளா?

6 days ago 15

மும்பை,

'ஹவுஸ்புல்' என்பது இந்தி நகைச்சுவை திரைப்படத் தொடராகும். இந்த தொடரின் முதல்படம் 2010-ல் வெளியானது. இதில் அக்சய் குமார் , ஜியா கான், அர்ஜுன் ராம்பால், ஜாக்குலின் பெர்னாண்டஸ், லாரா தத்தா மற்றும் சங்கி பாண்டே ஆகியோர் நடித்தனர்.

இந்த தொடரில் இதுவரை 4 படங்கள் வெளியாகி உள்ளன. இந்த 4 படங்களிலும் அக்சய் குமார் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ளனர். சஜித் நதியத்வாலா தனது நாடியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் என்ற பேனரில் தயாரித்துள்ளார். ஒவ்வொரு படமும் முந்தைய படத்தின் கதையுடன் தொடர்பில்லாத ஒரு புதிய கதையாகவே இருக்கும்.

தற்போது 'ஹவுஸ்புல்' தொடரின் 5-ம் பாகம் உருவாகி வருகிறது. 5-வது பாகத்தை எட்டிய முதல் இந்தி சினிமா என்ற பெருமை 'ஹவுஸ்புல்' படத்தையே சேரும். இதில், அக்சய் குமார், ரித்தேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன், சஞ்சய் தத், பர்தீன் கான், நானா படேகர், சங்கி பாண்டே, ஜாக்கி ஷெராப் மற்றும் டினோ மோரியா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் ஐந்து நடிகைகள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஜாக்குலின் பெர்னாண்டஸ், நர்கிஸ் பக்ரி, சோனம் பஜ்வா, சித்ராங்தா சிங் மற்றும் சவுந்தர்யா ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப்படத்தை அடுத்த ஆண்டு, ஜூன் மாதம் 6-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

Read Entire Article