வேட்டையன் படத்தின் 2வது பாடல்...அப்டேட் கொடுத்த அனிருத்

1 day ago 4

சென்னை,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க, 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார்.அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் முதல் பாடலான 'மனசிலாயோ' பாடல் வெளியாகி வைரலானது.

முதல் பாடலைத் தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. இது குறித்து இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வேட்டையன் படத்தின் ஹண்டர் வண்டார் பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என்று குறிப்பிட்டு, பாடலின் புரோமோ வீடியோவை பகிர்ந்துள்ளார்.

#HunterVantaar , next song from #Vettaiyan from day after

Superstar @rajinikanth @tjgnan @LycaProductions @SonyMusicSouth

@siddharthbasrur
@Arivubeing pic.twitter.com/13QxZ9sVth

— Anirudh Ravichander (@anirudhofficial) September 18, 2024

Read Entire Article