வீட்டில் அறையில் அடைத்து இளம்பெண் பலாத்காரம்: ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய யூடியூபர் கைது

3 months ago 11

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே பக்கத்து வீட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய யூடியூபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூர் அருகே சாலக்குடியைச் சேர்ந்தவர் பினீஷ் பென்னி (32). யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளம்பெண்ணின் குழந்தை பினீஷின் வீட்டுக்கு விளையாட செல்வது வழக்கம்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விளையாடச் சென்ற குழந்தையை அழைப்பதற்காக பினீஷின் வீட்டுக்கு இளம்பெண் வந்துள்ளார். அப்போது பினீஷ் ஒரு அறையில் அடைத்து வைத்து இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.மேலும் ஆபாச வீடியோவும் எடுத்து உள்ளார். பின்னர் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டி மீண்டும் அவரை பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். இது குறித்து இளம்பெண் கணவனிடம் கூறினார்.

அதைத்தொடர்ந்து சாலக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பினிஷ் பென்னியை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தது. விசா மோசடி செய்தது ஆகிய வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

The post வீட்டில் அறையில் அடைத்து இளம்பெண் பலாத்காரம்: ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய யூடியூபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article