
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அருகே வி.புத்தூர் புது காலனியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் நவீன் ராஜ், இவர் தனது நண்பன் கோபியுடன் மாடு மேய்ச்சலுக்கு சென்றார், அப்போது அங்கு சட்ட விரோதமாக பன்றிக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி தூக்கி வீசப்பட்டனர்.
வெகு நேரம் ஆகியும் சிறுவர்கள் வீடு திரும்பாத நிலையில் அவர்களைத் தேடிச் சென்ற உறவினர்கள், இருவரும் மயக்க நிலையில் வேலி அருகே கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர், உடனடியாக அவர்களை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், நவீன் ராஜ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கோபி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அருகே சட்ட விரோதமாக பன்றிக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிந்தான்.