விஜயலட்சுமி வழக்கில் வளசரவாக்கம் போலீசார் முன்பு வேறு ஒரு நாளில் ஆஜராகிறார் சீமான்..!!

3 hours ago 2

சென்னை: விஜயலட்சுமி வழக்கில் வளசரவாக்கம் போலீசார் முன்பு சீமான் வேறு ஒரு நாளில் ஆஜராக உள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி மீண்டும் அளித்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த கடந்த 17ம் தேதி விசாரித்த நீதிபதி இளந்திரையன், சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் விஜயலட்சுமி இந்த வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது என்றும், அடுத்த 12 வார காலத்திற்குள் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதனையடுத்து பிப்ரவரி 27ஆம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் காவல் துறையினர் சம்மன் அனுப்பினர்.

இதற்கிடையே பெங்களூரில் வசித்து வரும் நடிகை விஜயலட்சுமியின் வீட்டிற்கே சென்று சுமார் 5 மணி நேரம் வளசரவாக்கம் போலீசார் நேற்று அவரிடம் விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் வளசரவாக்கம் ஸ்டேஷனில் நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விசாரணைக்கு சீமான் ஆஜராகவில்லை. ஏற்கனவே திட்டமிடப்பட்ட சுற்றுப்பயணம் காரணமாக சீமான் இன்று போலீஸ் முன் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணைக்கு வேறு ஒருநாளில் ஆஜராவதாக வழக்கறிஞர்கள் மூலம் சீமான் தெரிவித்தார். சென்னை கோயம்பேடு காவல் துணை ஆணையர் அதிவீர பாண்டியனிடம் வழக்கறிஞர்கள் விளக்க கடிதம் கொடுத்தனர்.

 

The post விஜயலட்சுமி வழக்கில் வளசரவாக்கம் போலீசார் முன்பு வேறு ஒரு நாளில் ஆஜராகிறார் சீமான்..!! appeared first on Dinakaran.

Read Entire Article