
சென்னை,
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பணிகள் 2017-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. அதன் பிறகு ரிலீஸ் தேதி குறித்த எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழுவினர் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது 'துருவ நட்சத்திரம்' எப்போது வெளியாகும் என ஆர்வத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு நல்ல தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, துருவ நட்சத்திரம் திரைப்படத்தை மே 1 ந் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதே நாளில் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
