வி.சி.க., நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.,வும் பங்கேற்கலாம்: திருமாவளவன்

1 week ago 8

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம். மக்கள் பிரச்சினைக்காக சாதிய, மதவாத சக்திகள் தவிர பிற எந்த சக்திகளோடும் இணைவோம். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட அரசு முன் வர வேண்டும்" என்றார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்தான் அதிமுக பங்கேற்கலாம் என்று தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் விசிக அங்கம் வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் இந்த திடீர் அழைப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

Read Entire Article