வாழ்க்கையை வண்ணமயமாக்கும் குரோமோ தெரபி!

1 week ago 8

‘வண்ணச் சிகிச்சை எனும் குரோமோ தெரபி’ இயற்கை மருத்துவத்தில் உள்ள சிகிச்சை முறையாகும். சூரியனின் ஒளியில் இருந்து வண்ணங்கள் உருவாகுகிறது. இவ்வாறு உருவாகும் வானவில் நிறங்களான ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் இந்த சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன.மன அழுத்தம், தூக்கமின்மை, தோல் நோய்கள், கேன்சர், ஜீரணக் குறைபாடு போன்ற பல வியாதிகளுக்கு இந்த வண்ணச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்றது.‘கிரிஸ்டல்’ எனப்படும் கலர் கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி வெயிலில் வைத்து அந்த நீர் அல்லது எண்ணெய் இந்த சிகிச்சைக்குப் பயன்படும்.வண்ணச் சிகிச்சை முறை மூலம் பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயின் தன்மையைப் பொறுத்து ஆலோசனை வழங்கப்படும். பாதிக்கப்பட்ட நோய்க்குத் தகுந்த வண்ணங்களை காண்பதன் மூலம் நோய் குணமாகிறது.

தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்களின் படுக்கை அறையை நீல நிறத்திற்கு மாற்றும்படி ஆலோசனை வழங்கப்படுகிறது. நீலநிறத்திற்கு மனதை அமைதிப்படுத்தும் தன்மை உண்டு.சிவப்பு வண்ணச் சிகிச்சை ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை நீக்கவும், உடல் எடையை குறைக்கவும் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது.மஞ்சள் வண்ணச்சிகிச்சை உடல் மற்றும் மனம் தெளிவடைய உதவும். நல்ல சிந்தனைக்கும், உடல் புத்துணர்ச்சிக்கும், பெருங்குடல் சீராக வேலை செய்யவும் உதவுகிறது.ஆரஞ்சு வண்ணச் சிகிச்சை மூலம் மந்தமான தன்மையில் இருந்து மீண்டு துடிப்பான நிலைக்கு வர உதவுகிறது.பச்சை வண்ணச் சிகிச்சை உடலில் உள்ள வலிகளை நீக்கப் பயன்படுகிறது. குறிப்பாக இந்த நிறம் மூட்டு எலும்புகள் சம்பந்தப்பட்ட வலிகள் நீங்க பயன்படுகிறது. தலைவலிகள் நீங்க பயன்படுகிறது. தலைவலிக்குச் சிறந்த நிவாரணியாக இருக்கிறது.ஊதா வண்ணச் சிகிச்சை மனச் சோர்வு நீக்கவும், மன அழுத்தம் குறையவும், மனம் சார்ந்த அனைத்து நோய்களையும் குணப்படுத்தவும் பயன்படுகிறது.கருநீல வண்ணச் சிகிச்சை மனதை அமைதிப்படுத்தவும், உடலைச் சீராக இயங்க வைக்கவும் பயன்படுகிறது.
– அ.ப. ஜெயபால்.

 

The post வாழ்க்கையை வண்ணமயமாக்கும் குரோமோ தெரபி! appeared first on Dinakaran.

Read Entire Article