வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது தக்காளி கிலோ ரூ.10க்கு விற்பனை

1 week ago 9

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மழை குறைந்து விட்ட காரணத்தால் தக்காளி சாகுபடியில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ ரூ.10க்கு‌ விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளான அணைக்கரைப்பட்டி, டி.புதூர், மூணாண்டிபட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, சித்தார்பட்டி, பாலக்கோம்பை, மரிக்குண்டு, தெப்பம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் தக்காளிகளை ஆண்டிபட்டி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது.

கடந்த மாதத்தில் இப்பகுதிகளில் பரவலாக பெய்த மழை காரணமாக தக்காளி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் தக்காளி வரத்து அடியோடு சரிந்தது. இதனால் இங்குள்ள மக்களின் பயன்பாட்டிற்கு வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி மார்க்கெட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு கூடுதல் விலைக்கு ஏலம் விடப்பட்டது. 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.4000 ஆயிரம் முதல் ரூ.4500 வரை ஏலம் போனது. ஆண்டிபட்டி நகர் பகுதியில் ஒரு கிலோ தக்காளி சில்லறையாக ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் கடந்த இரண்டு வார காலமாக 50 ரூபாய்க்கு கீழ் குறையாமல் விற்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி வரத்து சற்று அதிகரித்து மார்க்கெட்டிற்கு வர தொடங்கி உள்ளது. இதனால் ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் ஏலம் போன 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ஒன்று தற்போது ரூ.150 மட்டுமே ஏலம் போகிறது. இதனால் நகர் பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி பொதுமக்களுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை சில்லறையாக விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டிபட்டி பகுதியில் குறையாமல் இருந்த தக்காளியின் விலை ரூ.10க்கு பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இனிவரும் நாட்களில் தக்காளியின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது தக்காளி கிலோ ரூ.10க்கு விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article