வங்காளதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி

6 days ago 6

டாக்கா,

வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்கிழக்கு காக்ஸ் பஜார் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பல குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டாக்காவில் இருந்து தென்கிழக்கே 392 கி.மீ. தொலைவில் உள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் கடந்த வியாழக்கிழமை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதாக கூடுதல் அகதிகள் நிவாரண ஆணையர் முகமது ஷம்சுத்தூசா நயன் தெரிவித்தார்.

தற்போது கிட்டத்தட்ட 10 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள ஹதிகும்ருல்-14 ரோஹிங்கியா முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக ஒரு ரோஹிங்கியா குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்ததாக நயன் கூறினார். அவர்களில் பெரும்பாலோர் மலைகளின் சரிவுகளில் வாழ்கின்றனர், மேலும் நிலச்சரிவு முகாமில் குறைந்தது மூன்று குடிசைகளை அழித்தது. இதனை தொடர்ந்து ஆபத்தான சரிவுகளில் இன்னும் வசிப்பவர்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Read Entire Article