வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்; இந்தியாவின் ஆடும் லெவனை தேர்வு செய்த பாக். முன்னாள் வீரர்

1 week ago 7

கராச்சி,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி மட்டும் சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதில் ரோகித், ஜெய்ஸ்வால், கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கே.எல்.ராகுல் மற்றும் பண்ட் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய வங்காளதேசம் அதே உத்வேகத்துடன் இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில், வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்தியாவின் ஆடும் லெவனை பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி தேர்வு செய்துள்ளார்.

ரோகித், ஜெய்ஸ்வாலை தொடக்க ஆட்டக்காரர்களாக தேர்வு செய்த பாசித் அலி, மிடில் ஆரடரில் கில், கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ஆல்ரவுண்டர்களாக அஸ்வின், ஜடேஜாவை தேர்வு செய்த பாசித் அலி, பந்துவீச்சாளர்களாக குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளார்.

பாசித் அலி தேர்வு செய்த இந்திய ஆடும் லெவன் விவரம்;

ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல். ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ்.

Read Entire Article