லெபனான் நாட்டில் பேஜர்கள் மூலம் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலி; 2,700-க்கும் மேற்பட்டோர் காயம்!

3 days ago 4

பெய்ரூத்: லெபனான் நாட்டில் பேஜர்கள் மூலம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் கடந்த அக்டோபர் மாதம் போர் தொடுத்தது. சுமார் 10 மாதங்களுக்குமேல் நடந்து வரும் இப்போரை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரவும், ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேல் நாட்டவர்களை திரும்ப ஒப்படைக்கவும் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக இருந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதனிடையே காஸாவில் ஹமாஸ் படையுடனான இஸ்ரேலின் சண்டையைத் தொடர்ந்து, லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்துள்ளது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையும் ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து லெபனான் மற்றும் சிரியாவில் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக லெபனான் நாட்டில் பேஜர்கள் மூலம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஜர்கள் மூலம் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 2,700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

The post லெபனான் நாட்டில் பேஜர்கள் மூலம் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலி; 2,700-க்கும் மேற்பட்டோர் காயம்! appeared first on Dinakaran.

Read Entire Article