ரூ.2,200 கோடி ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி: அசாம் நடிகை கணவருடன் கைது

1 week ago 8

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் போலி நிறுவனங்களை நடத்தி அதன் மூலம் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு ரூ.2,200 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பதை அம்மாநில போலீசார் அண்மையில் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 22 வயதான பிஷால் புகான் என்கிற முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடியில் பலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த வகையில் பிரபல அசாமி நடிகை சுமி போரா மற்றும் அவரது கணவர் தர்கிக் போரா ஆகிய இருவருக்கும் பங்கு வர்த்தக மோசடியில் தொடர்பு இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகும்படி அவர்கள் இருவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினர். இந்த நிலையில் நடிகை சுமி போரா மற்றும் அவரது கணவர் தர்கிக் போரா ஆகியோர் சரணடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், அசாமின் சிறப்பு அதிரடிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

மோசடி தொடர்பாக அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 60 நாட்களில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி 1,500க்கும் மேற்பட்ட நபர்களிடம் பணமோசடி செய்தது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Entire Article