ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் சேது விரைவு ரயிலின் 3 பெட்டிகள் திருச்சியில் கழன்றதால் பரபரப்பு..!!

2 days ago 2

திருச்சி: ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரை செல்லக்கூடிய சேது விரைவு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று இரவு சரியாக 8.20 மணிக்கு புறப்பட்டது. அந்த வண்டியானது ராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு 1.30 வந்த போது ரயில் நிலையத்திற்கு முன்பாக மேம்பாலம் அருகே சேது விரைவு ரயிலின் 3 பெட்டிகள் தாமாகவே கழன்றது.

இதன் காரணமாக ரயிலில் இருந்த 500க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். உடனடியாக முன் சென்ற ரயில் நிறுத்தப்பட்டது. கழன்ற ரயில் பெட்டிகள் சிறிது தூரம் நகர்ந்து சென்று நின்றது. உடனடியாக ரயில்வே ஊழியர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து பிரிந்திருந்த பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 1.15 க்கு திருச்சியிலிருந்து புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் வண்டியானது 2 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டது.

இதன் காரணமாக அரைமணி நேரத்திற்கு தாமதமாக சென்னை எழும்பூருக்கு காலை 7.40 மணிக்கு ரயில் வந்தடைந்தது. மேலும், ரயில் பெட்டிகள் எதன் காரணமாக பிரிந்து சென்றது என்பதை குறித்து ரயில்வே உயர்மட்ட அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் ரயில் பெட்டிகள் கழன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் சேது விரைவு ரயிலின் 3 பெட்டிகள் திருச்சியில் கழன்றதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article