ரயில்டெல் நிறுவனத்தில் 48 உதவி மேனேஜர்

3 weeks ago 11

பணியிடங்கள் விவரம்:

1. அசிஸ்டென்ட் மேனேஜர்: (டெக்னிக்கல்): 18 இடங்கள். சம்பளம்: ரூ.30,000-1,20,000. தகுதி: எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் டிப்ளமோ/எம்.எஸ்சி அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. டெபுடி மேனேஜர் (டெக்னிக்கல்)
i) நெட்வொர்க்/ஐபி: 10 இடங்கள். சம்பளம்: ரூ.40,000- 1,40,000. தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகாம்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ii) சிக்னலிங்: 8 இடங்கள். சம்பளம்: ரூ.40,000-1,40,000. தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகாம்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/கம்ப்யூட்டர் மற்றும் கம்யூனிகேஷன்/ஐடி பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. அசிஸ்டென்ட் மேனேஜர்
i) மார்க்கெட்டிங்: 8 இடங்கள். சம்பளம்: ரூ.30,000-1,20,000. தகுதி: மார்க்கெட்டிங் பாடத்தில் முதுநிலை டிப்ளமோ/எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) நிதி: 4 இடங்கள். சம்பளம்: ரூ.30,000-1,20,000. தகுதி: நிதி பாடத்தில் முதுநிலை டிப்ளமோ/எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது வரம்பு 30.06.2025 தேதியின்படி 21 லிருந்து 28க்குள் இருக்க வேண்டும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.1,200/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.600/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
https://www.railtel.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2025.

The post ரயில்டெல் நிறுவனத்தில் 48 உதவி மேனேஜர் appeared first on Dinakaran.

Read Entire Article