யாகி புயல் : வியட்நாமில் பலி எண்ணிக்கை 226 ஆக உயர்வு

1 week ago 7

ஹனோய்,

பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் சீனாவை தொடர்ந்து வியட்நாமை மிரட்டியது. வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து யாகி புயல் வீசியது. மணிக்கு 149 கி.மீ வேகத்தில் காற்று வீசி தலைநகர் ஹனோயில் யாகி புயல் கரையை கடந்தது. வியட்நாமில் இந்த நூற்றாண்டின் மிக பயங்கரமான புயலாக கருதப்படும் இந்த யாகி, அந்த நாட்டை முழுவதுமாக உலுக்கியது.

இதில், யாகி புயல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட கனமழையில் வியட்நாமின் வடக்குப் பகுதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு கனமழை, வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவுகளில் சிக்கி 219 உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வெள்ள நீரில் மூழ்கிய கிராமங்களில் இருந்து நேற்று மேலும் 7 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. அதையடுத்து, வியட்நாமில் மட்டும் யாகி புயல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 226-ஆக அதிகரித்துள்ளது.

Read Entire Article