
சென்னை,
மலையாள சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். சமீபத்தில் இவர் இயக்கி நடித்த 'பரோஸ்' படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனை தொடர்ந்து மோகன்லால், பிருத்விராஜ் இயக்கத்தில் 'எம்புரான்' படத்திலும், நந்தா கிஷோர் இயக்கிய "விருஷபா" படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இந்த நிலையில், மோகன்லால் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தினை மலையான மூத்த திரைப்பட தயாரிப்பாளர் சத்யன் அந்திகாட் இயக்க உள்ளார். இப்படத்திற்கு 'ஹிருதயபூர்வம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்த பதிவை நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.