சென்னை: சென்னை ஐஐடி-யில் வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள வருகை தரும் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தாருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்தக் கூட்டமைப்பு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வட இந்திய மாநிலங்களில் பேசப்பட்டு வந்த 20-க்கும் மேற்பட்ட அந்த மக்களின் தாய்மொழிகளைக் கடந்த ஒரு நூற்றாண்டில் இந்தி எனும் ஆதிக்க மொழிப் படையெடுப்பு சிதைத்துள்ளது. தற்போது தமிழகத்துக்குள் மும்மொழிக் கொள்கை என்ற முகமூடி அணிந்து நுழைய முயற்சிக்கிறது. மேலும் இந்தியின் வழியே சமஸ்கிருதத்தைத் திணித்துத் தமிழர்களின் பண்பாட்டைச் சிதைக்கும் சூழ்ச்சியும் இதில் அடங்கியிருக்கிறது.