மேட்டூர்: மேட்டூர் அணையில் பச்சையாக மாறிய தண்ணீரால், கடும் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த திறனூட்டப்பட்ட நுண்ணுயிர் திரவ கலவை இன்று தெளிக்கப்பட்டது.
மேட்டூர் அணை நீர்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை, கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, கர்நாடக அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பால் கடந்த ஜுலை மாதம் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து, அணையில் இருந்து டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது.