முஸ்லிம்களின் உரிமைகள் மறுப்பு; இந்தியாவை விமர்சித்த ஈரான் தலைவர்: வெளியுறவு துறை கடும் கண்டனம்

3 days ago 4

புதுடெல்லி: இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக விமர்சித்த ஈரான் தலைவரின் பதிவுக்கு வெளியுறவு துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டின் அதிகாரமிக்க தலைவரான அயதுல்லா அலி கமேனி வெளியிட்ட பதிவில், ‘காசா, மியான்மரில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவது போன்று இந்தியாவிலும் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இவ்வாறு துன்பப்படும் முஸ்லிம் மக்களைப் பாதுகாக்க, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் குறித்து ஈரானின் தலைவர் தெரிவித்த கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். அடிப்படை ஆதாரமற்ற தகவலை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரது நாட்டில் வசிக்கும் சிறுபான்மையினர் நிலைமை குறித்து அவர் கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மற்றவர்கள் மீது கருத்து சொல்லும் முன், தங்களது நிலையை உணர வேண்டும்’ என்று கூறினார். ஈரான் நாட்டை பொருத்தமட்டில், அந்நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் தொடர்பான விமர்மனங்களை சர்வதேச அளவில் எதிர்கொண்டு வருகிறது.

The post முஸ்லிம்களின் உரிமைகள் மறுப்பு; இந்தியாவை விமர்சித்த ஈரான் தலைவர்: வெளியுறவு துறை கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article