முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது புதிய வழக்கு: லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் நடவடிக்கை

21 hours ago 5

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால்வாய், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்தம்விட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் 10 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் 2018 நவ.1, 7, டிச. 1 மற்றும் 2019 ஜன. 3, செப். 26, 2020 பிப். 14 ஆகியதேதிகளில் புகார் அளித்திருந்தார். அதில், 2018-ம் ஆண்டில் சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.290 கோடி மற்றும் சேதமடைந்த சாலைகளை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.246.39 கோடிக்கு ஒப்பந்தங்கள் விடப்பட்டதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் பலர் மீது புகார் தெரிவித்திருந்தார்.

Read Entire Article