சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது. தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜன.6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாததை காரணம் காட்டி உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற்றது. அந்த விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் 11-ம் தேதி பதில் அளித்தார். மொத்தம் 6 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பட்டா மாற்றமல் உள்ள நிலங்களுக்கு பட்டா மாறுதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் 29,000 பேருக்கு பட்டா வழங்க அமைச்சரை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்முலம் 86 ஆயிரம் பேர் பயனடைய உள்ளனர். 4 ஆண்டுகளில், 10.25 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. நீர்நிலை புறம்போக்கு இடங்களுக்கு பட்டா வழங்க முடியாது.
நில உரிமையாளர்களுக்கு 6 மாதத்திற்குள் புதிய பட்டா மாற்றி வழங்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ராமசந்திரன் பேட்டி அளித்துள்ளார். 6 மாத காலத்தில் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியும் -தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு appeared first on Dinakaran.