முடி வளர்ச்சிக்கு உதவும் முக்கிய உணவுகள்?!

1 week ago 8

உறுதியானக் கூந்தலுக்கு வைட்டமின் ஏ, சி, இ, பி5, பி6, பி12, இரும்புச் சத்து, துத்தநாகம், பாதாம் மிக மிக அவசியம். இவை முடி உதிர்வைத் தடுக்கவும். நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் மாற்றக் கூடியவை.
முட்டை: முட்டையில் உள்ள வெள்ளைப் பகுதியில் ‘அல்புமின்’ என்ற புரதம் உள்ளது. அது கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதில் முடி உதிர்வதை தடுக்கும் ‘பயோட்டின்’ என்கிற வைட்டமினும் உள்ளது.

பீன்ஸ்: பீன்ஸில் கறுப்பு பீன்ஸ், சோயா பீன்ஸ், கிட்னி பீன்ஸ் எனப் பலவகைகள் உள்ளன. இந்த பீன்ஸ் வகைகளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி, சி மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட தாது உப்புகள் நிறைவாக உள்ளன. இவை தலைமுடிக்கு நல்ல உறுதியையும், வளர்ச்சியையும் கொடுக்கும். மேலும் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தக் கூடிய இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக கிட்னி பீன்ஸ், சோயா பீன்ஸ், கறுப்பு பீன்ஸ் ஆகியவை கூந்தல் அடர்த்தியாக வளர உதவுகிறது.

பசலைக் கீரை: பசலைக் கீரையில் அதிக அளவு இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, புரதம் உள்ளன. முடி உதிர்வுக்கு ஒரு முக்கிய காரணமான இரும்புச் சத்துக் குறைபாட்டுக்கு தீர்வாக உள்ளது. மேலும் தலையில் உள்ள எண்ணெய் சுரப்பியைத் தூண்டி, முடிக்கு இயற்கையான கண்டிஷனராகச் செயல்படுகிறது.

ஓட்ஸ்: ஓட்ஸில் உள்ள சத்துக்கள் மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. முடி வளர்ச்சிக்கு தேவையான பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் ஆகிய சத்துக்கள் ஓட்ஸில் உள்ளன. இவை முடி வேகமாகவும், கறுமையான நிறத்திலும் வளரத் தேவையானச் சத்துக்கள் ஆகும்.

சர்க்கரைவள்ளிகிழங்கு: இதில் வைட்டமின் ‘ஏ’ நிறைந்துள்ளதால் செல் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் புரதம், தாமிரம், இரும்புச் சத்தும் உள்ளன. இவை முடி கொட்டுவதைத் தவிர்க்க உதவுவதுடன் முடிக்கும், சருமத்துக்கும் ஆரோக்கியத்தைத் தருகின்றன.
– N. குப்பம்மாள்

The post முடி வளர்ச்சிக்கு உதவும் முக்கிய உணவுகள்?! appeared first on Dinakaran.

Read Entire Article